Must read

ஒன்ரை மணி நேரமாக கஷ்டப்பட்டு டைப் பன்னி இருக்கேன் படிங்க Pls...

நீங்கள் விஜய் ரசிகனா..? அஜித் ரசிகனா..? ரஜினியின் உயிர்த்தொன்டனா..? நீங்கள் தான் கட்டாயம் இதனை படிக்க வேண்டும்...

தமிழினம் விழித்துக்கொன்டது..!
இங்கு நான் அதை மேலும் ஒருபடி தெளிவு படுத்தப்போகின்றேன்..,

விவசாயிகளுக்கு தர வேண்டிய மதிப்பு மரியாதைகளை நாம் கூத்தாடி(நடிகர்) களுக்கு கொடுத்துக்
கொண்டிருக்கிண்றோம்

விவசாயி நமக்கு உணவளிப்பவன் அவனை(ரை) கடவுள் ஆக நினைக்க வேண்டும் என
 நான் கூறவில்லை

எங்கோ ஒருவன் தன் வாழ்க்கைக்காக கேமிரா முன் நடித்து பிழைப்பு நடத்துபவனை ஏன் மணித கடவுள் என கூறுகின்றீர்கள் என புரியவில்லை (சமீப காலமாக Facebook ல் வலம் வந்தவை)

நடிப்பை (நடிகனை) கண்டு ஏமாறாதே தமிழா :

*சிவாஜி படத்தில் ரஜினி தன் சொத்துக்களை விற்றும் கருப்பு பனத்தை அபகரித்து தமிழ் நாட்டுக்கு நன்மை செய்தார்
உண்மையில் அவர் அந்த படத்தில் நடித்து சம்பாதித்ததர்காவது வரி கட்டி இருப்பாரா...?
இல்லை படத்தில் வருவதை போல் ஒரு நண்மையாவது செய்து இருப்பாரா...?

*அடுத்து  விஜய் :
கத்தி படத்தில் விவசாயிகளுக்காக போராடினார்....  உண்மையில் இப்போதுதான் தமிழகமே விவசாயிகளுக்காக போராடி கொண்டிருக்கின்றது..

உண்மையாக விஜய்  இப்போது இறங்கி குரல் கொடுப்பாரா...?

(விஜயை பற்றி பேசியவுடன் நீங்கள் நான் அஜித் ரசிகன் என நினைத்திருப்பீர்கள்..
உண்மையில் அப்படி நினைக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்)...

*அஜித் : ஒரு மீணவனாக
சிட்டிசன் படத்தில் நடித்திருந்தார்  மீணவர்களின் வாழ்கையில் உள்ள கஷ்டங்கள் அந்த படத்திற்கு பின்புதான் அதிகமானோருக்கு தெரிந்திருக்கும்,
  ஆனால் இன்று நம் மீணவர்கள் படும் துன்பங்கள் எவ்வளவு என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை,
உண்மையில்   மீனவர்களுக்காக அஜித் அவர்களால் குரல் கொடுக்க முடியுமா...?

இப்படி ஒவ்வொரு நடிகரையும் கூறிக்கொண்டே செல்லலாம்..

ஒன்றை மட்டும் நாம் இங்கே அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்...
அவர்கள் ஏன் நமக்காக வந்து போராட வேண்டும்...?

ஒரு ஆசிரியரின் வேலை பாடம் நடத்துவது,

ஒரு நெசவாளி யின் வேலை தறி நெய்வது..

ஒரு விவசாயியின் வேலை விவசாயம் செய்வது

அதேப்போல்தான் தமிழனே...!
 ஒரு கூத்தாடி (நடிகனின்) யின் வேலை கூத்தாடுவது (நடிப்பது)

அவரவர் அவர்களது
வேலை யை செய்து கொண்டிருக்கின்றனர்..

ஏன்..? நாம் நடிகர்களை மட்டும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகின்றோம்..?

பல ஆயிரம் கொடுத்து நாம் ஊழைத்து வாங்கும் வண்டிகளிலும், செல்போன்களிளும் அவர்களது புகைப்படங்களை வைக்கின்றோம்.. நம் உயிரே போகும் நிலை வந்தாலும் அவன் நம்மை திரும்பிகூட பார்க்க போவதில்லை என்பதை உணருங்கள்...

இவர்களது படங்கள் வெளியாகும்போது
நம் அன்பு சகோதரர்கள் செய்வதென்ன:-

உன் தலைவன் பெரியவனா என் தலைவன் பெரியவனா என போட்டிகள் அதிலும் பேனர்கள்,போஸ்டர்கள்,
பட்டாசு ..., என தான் கஷ்டபட்டு உழைத்த பனத்தை வீனடிக்கின்றனர் .
இவற்றிர்கும் மேல் பால் அபிசேகம் வேற..,
( உன் செயல் "நம் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஒரு வேலை சோற்றக்கே கஷ்டப்படுகின்றனர்" என்பதை உணராத முட்டாள் நீ ! என உனர்த்துகின்றது)

படம் வெளியாகும் சமயங்களில் செய்யும் வீன் செலவுகளை எதாவது அனாதை ஆசிரமங்களுக்கும்,  ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் தர்மம்  செய்யுங்கள் புன்னியம் கிடைக்கும்,
""உங்களால் அவனுக்கும் அவனால் உங்களுக்கும்""

யாரையும் நம்மால் மாற்றமுடியாது..! முதலில் மாற்றத்தை நம்மிடமிருந்து கொண்டு வருவோம்

விழித்துக்கொள் தமிழா..!

கட்டாயம் Share செய்யுங்கள் என நான் இங்கு கூறவில்லை, உங்களுடைய மனநிலையும் இதுதான் எனில் பகிரலாம்...

படித்ததற்கு நன்றி நண்பா...!

     
 -நான் உங்களில் ஒருவன் (தமிழன்)

No comments: